குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் இன்று(30) புதிதாக தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள பாரதி தனியார் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இரண்டு மாவீர்களின் தாயொருவா் சுடரேற்றி வைக்க தொடர்ந்து அருட்தந்தை மற்றும் தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் செயலலாளர் மற்றும் தலைவா் ஆகியோh் விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
ஏற்கனவே ஜனநாயக போராளிகள் கட்சி இயங்கி வருகின்ற நிலையில் இன்று புதிதாக தமிழ்த் தேசிய சனநாயக போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல முன்னாள் போராளிகள் மாவீரர்களின் பெற்றோh் உறவினர்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்