குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற தேர்தலில் ஐஸ்லாந்தின் ஆளும் கூட்டணி பின்னடைவை தழுவியுள்ளது. அதேவேளை, மத்திய இடதுசாரி கட்சிகள் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. பிரதமர் பிஜர்னி பெனடிக்ட்ஸன் ( Bjarni Benediktsson ) இன் மத்திய வலதுசாரி சுயாதீன கட்சியே தொடர்ந்தும் பெரிய கட்சியாக காணப்பட்ட போதிலும், ஒப்பீட்டளவில் பாரியளவில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
எட்டு கட்சிகளுக்கு இடையில் ஆசனங்கள் பிரிந்து சென்றுள்ள நிலையில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் பாரியளவு சிக்கல் நிலை உருவாகியுள்ளது. பிரதமரின் தந்தை, சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்தே பிரதமர் பிஜர்னி பெனடிக்ட்ஸன் இடைத்தேர்தலை ஒன்றை நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.