குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளனர். பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்யும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான ஜின் லெம்பெட்டின் தலைமையில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வர உள்ளனர்.
ரிசட் கோபட், உல்ரீகே முல்லர் மற்றும் வஜிட் கான் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர். நல்லிணக்க முனைப்புக்களின் தற்போதைய நிலைமை மற்றும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நியதிகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 3ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் அவர்கள் நேரில் பார்வையிட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது