குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் கண்டி வீதியில் மடத்தடி சாந்தி பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களையும் 14 நாள்களுக்கு சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் இன்று கட்டளையிட்டார்.
யாழ்ப்பாண காவல்துறையினர் நேற்றிரவு 10 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மடத்தடிப்பகுதியில் , நின்ற சிலர் காபவல்துறையினரின் வாகனத்தை கண்டு சிலர் தப்பியோடியுள்ளனர்.
அவர்களை விரட்டிச்சென்ற காவல்துறையினர் நால்வரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்த நீண்ட குடையை சோதனை செய்தபோது அதனுள்ளிருந்து வாளொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட நால்வரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரையும் காவல்துறையினர் யாழ் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர். அவர்களை 14 நாள்களுக்கு சான்று பெற்ற பாடசாலையில் தடுத்து வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
யாழில்.வாள்களுடன் நடமாடியவர்கள் கைது
Oct 31, 2017 @ 07:21
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மடத்தடிப் பகுதியில் வாள்களுடன் நடமாடிய 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறையினரால்; நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் நடமாடினர். அவர்களை விசாரணை செய்த போது அவர்களின் உடைமையிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டன.
நால்வரும் யாழ்.மடத்தடி மற்றும் இராசாவின் தோட்டம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் 4 சந்தேகநபர்களும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.