குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெல்ஜியத்தில் புகலிடம் கோரவில்லை என கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont ) தெரிவித்துள்ளார். கட்டலோனிய ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட்டை ஸ்பெய்ன் அரசாங்கம் பணி நீக்கியிருந்தது. இந்தநிலையிலேயே புகலிடம் பெற்றுக் கொள்வதற்காக தாம் பெல்ஜியத்திற்கு பயணம் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் நீதிக்கு பயந்து கொண்டு தப்பிச் செல்ல போவதில்லை எனவும், சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட அனுமதியளிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெய்னில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக கார்லெஸ் பூகிடமண்ட் தெரிவித்துள்ளார். கட்டலோனிய சுதந்திரப் பிரகடனத்தை ஸ்பெய்னின் அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.