குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடாகும் என பாகிஸ்தான் ஜனாதிபதி மாமூன் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சாஹிட் அஹமட் ஹஸ்மாட், இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதலீடு செய்யப்படும் எனவும், இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் அனைத்து மத சமூகத்தினருக்கும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் பௌத்த யாத்ரீகர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.