திருவனந்தபுரத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான பொக்கிஷம் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் கெமாண்டோ வீரர்களை ரோந்துபணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய நிலவறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர ஆபரணங்கள் அடங்கிய பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள பெரிய நிலவறையான ‘பி’ நிலவறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலவறையிலும் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுபற்றிய வழக்கு உச்ச நீதிமன்றில் விசாரணையில் உள்ளது.
இந்தநிலையில் தற்போது பத்மநாப சுவாமி கோவில் அதிநவீன பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன் இந்த கோவிலின் முக்கிய பகுதிகள் நவீன கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மேலும் கமாண்டோ வீரர்களும் இந்த கோவிலின் பாதுகாப்பு பணியை ஏற்று உள்ளனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
பத்மநாபசுவாமி கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த கமாண்டோ வீரர்களில் சிலரை கோவிலை சுற்றி ரோந்துபணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.