177
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினர். பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜீன் லெம்பட்டின் தலைமையில் றிச்சட் கோபட் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்பி வரிச் சலுகையை நாடு கடைப்பிடிக்க வேண்டியச சர்வதேச இணக்கப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கண்டறியவுள்ளனர். இவர்கள் இன்று வடக்கு வருகைதந்துள்ளனர். இதன்போதே வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்தனர்.
Spread the love