176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
30 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாகிஸ்தான் தம்பதியினரிடமிருந்து 2.7 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 வயதான ஆண் ஒருவரும், 30 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கைப் பைகளுக்குள் இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love