குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனத்தில் பிரிவினைவாதம் வலுப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எந்தவொரு பகுதியும் பிளைவடையச் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் அமைப்பில் பிரிவினைவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித சரத்துக்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசியல் சாசனத்தின் 157ம் சரத்தில் இலங்கையில் தனிநபர்கள் அல்லது குழுக்கள் நாட்டை பிளவடையச் செய்ய முடியாது எனவும் அவ்வாறு பிரிப்பதற்கு முயற்சித்தால் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.