174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கம் மதப் போரை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் புதிய அரசியல் சாசனத்தினை கொண்டு வருவதன் மூலம் இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 29 ஆண்டுகளாக நாட்டில் இனவாதம் காரணமாகவே யுத்தம் ஏற்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love