குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி துங் லாய் மர்கு தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அபிலாஸைகளை பூர்த்தி செய்யும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தநிலையில் இலங்கையின் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோப் புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கும் அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கில் செயற்பட்டாலும் அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றியளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்