குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கட்சி போட்டியிட உள்ளது. மேர்வின் சில்வா மக்கள் கட்சி என்ற ஓர் கட்சியை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும், தனித்து போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் கட்சில் இணைந்து கொள்ள தடை ஏதும் கிடையாது என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.