குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் பாராட்டப்பட வேண்டியவை என அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு குறுகிய பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் காத்திரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் வலுவான ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கரையோரப் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் மூன்று அதிநவீன படகுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரி அமைக்கும் இலங்கையின் முயற்சிக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.