Home இலங்கை இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய 13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய 13 இந்திய மீனவர்கள் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.  அவர்களின் 3 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நெடுந்தீவில் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் தற்போது கடற்படை முகாமில் தடுத்துவைகக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More