குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மது போதையில் வாகனம் செலுத்திய முச்சக்கர வண்டி சாரதியின் , சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாக தடை செய்ய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய குற்ற சாட்டில் முச்சக்கர வண்டி சாரதியை காவல்துறையினர்; கைது செய்து நீதிமன்றில் நேற்று புதன் கிழமை முற்படுத்தி இருந்தனர்.
அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சாரதியின் , சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாக தடை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத சிறை தண்டனையும் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.