குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பரிஸ் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதி போட்டிக்கு ரபால் நடால் முன்னேறியுள்ளார். 31 வயதான ஸ்பெய்னின் ரபால் நடால், உருகுவேயின் பாப்லோ குயுவாஸை தோற்கடித்துள்ளார். நடால், 6-3, 6-7 மற்றும் 6-3 என்ற செற்கணக்கில் பாப்லோவை தோற்கடித்துள்ளார்.
இந்தப் போட்டித் தொடரின் இரண்டாம் சுற்றில் வெற்றியீட்டியதன் மூலம் நடால் இந்த ஆண்டு முழுவதிலும் உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் நிலை வகிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. நடால், காலிறுதிச் சுற்றில் சேர்பிய வீரரான பிலிப் கரிஜினோவிக்கை எதிர்த்தாட உள்ளார். நடால் இதுவரையில் 16 கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.