குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்து அதற்கு பதிலீடாக நிறைவேற்று அதிகார பிரதமர் முறை அறிமுகம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசன செயற்குழுவிற்கு ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் யோசனைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் இதுவரையில் உருவாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து கட்சிகளினதும் யோசனைகளை உள்ளடக்கி அரசியல் சாசனம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.