குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படாமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லம்பேர்ட் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படாமைக்கு என்ன காரணம் என்று புரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று புதிதாக அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் கடந்த ஆண்டு வாக்குறுதி அளித்திருந்த போதிலும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.