151
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஏக்கிய’ என்ற வசனத்தைத் தவிர வேறெதனையும் ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளாது என, அக் கட்சியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஏக்கிய என்பது, நாட்டின் அடிப்படைச் சட்டம் எனவும் அதனை ஒரு நிறுவனத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையுமே தமது கட்சியின் கருத்தாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நிறுவனங்களுக்கு சட்டத்தின் அதிகாரங்கள், அரசமைப்புக்கூடாக பிரித்துக் கொடுக்கப்படுமாயின், அந்த ஏக்கியவில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love