ஈராக்கின் மொசூல் நகரில் அமெரிக்க கூட்டுப்படையுடன் நடந்த சண்டையின் போது மனிதகேடயமாக பயன்படுத்திய 741 பொதுமக்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொன்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சயீத் அல் உசேன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.அதிக எண்ணிக்கையிலான ஆட்கடத்தல், பாதுகாப்பு கேடயங்களாக மக்களை பயன்படுத்துதல், வேண்டுமென்றே வீடுகள் மீது எறிகளை வீசி தாக்குதல் மேற்கொண்டமை , தப்பி செல்ல முற்பட்டோரை இலக்கு வைத்து தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்களும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அவர்கள் செய்திருக்கும் கொடூர குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பதில் அளிக்க வேண்டும் எனவும் சயீத் அல் உசேன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈராக் படையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளும் குற்றச்சாட்டுகளும் புலனாய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் உக்கிரமாக நடைபெற்ற 2016 முதல் ஜூலை 2017 வரையான காலத்தில், ஈராக் ராணுவம் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதல்களால், 461 பொது மக்கள் இறந்துள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.