குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவின் முன்னைய பிராந்திய அரசாங்கத்தின் அமைச்சர்களை ஸ்பெயின் கைது செய்துள்ளமைக்கு ஆதரவை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஓன்றியம் கட்டலோனிய தலைவரிற்கு எதிராக ஸ்பெயின் பிடியாணை பிறப்பிக்கும் விவகாரத்தில் தலையிட மறுத்துள்ளது.
தற்போது பெல்ஜியத்தில் உள்ள கட்டலோனிய தலைவரிற்கு எதிராக ஸ்பெயின் பிடியாணை பிறப்பிக்கவுள்ளமை முற்றுமுமுதாக அந்த நாட்டின் நீதித்துறை சார்ந்த விவகாரம் எனவும் அவர்களது சுதந்திரத்தை நாங்கள் முற்றுமுழுதாக மதிக்கின்றோம் எனவும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னைய கட்டலோனிய அரசாங்கத்தின் எட்டு அமைச்சர்களை சிறையில் அடைக்கும் ஸ்பெயினின் முடிவை ஜேர்மனி வரவேற்றுள்ளது. ஸ்பெயின் சட்டத்தின் ஆட்சியால் வழிநடத்தப்படும் நாடு என குறிப்பிட்டுள்ள ஜேர்மனியின் பேச்சாளர் ஸ்பெயின் பிரதமரி;ன் நிலைப்பாடுகளை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.