இந்தியா நியூசிலாந்துக்டையிலான 2வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு இடம்பெறவுள்ளது.
இந்தியா சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்றுள்ளது. டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 53 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இது தான இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ள சம்பவமாகும்.
இந்த நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரினைக் கைப்பற்றுவதுடன் முதலாம் இடத்தினையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.