குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் நட்சத்திர டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ஸ்பெய்னின் ரபால் நாடால் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டித் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். நடால் இந்தப் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் இந்த அரையிறுதிப் போட்டி நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலக டென்னிஸ் தர வரிசையில் நடால் முதலாம் இடத்தை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உபாதை காரணமாக அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஏ.ரீ.பி டென்னிஸ் போட்டித் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது. நடால் இதற்கு முன்னரும் சில தடவைகள் முழங்கால் உபாதை காரணமாக போட்டிகளிலிருந்து விலகிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் பதினாறு கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள நடால், இதுவரையில் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டித் தொடர் ஒன்றில் வெற்றியீட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.