159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆர்ஜன்டீனாவின் முன்னாள் துணை ஜனாதிபதி அமாடோ பியூடோ ( Amado Boudou ) கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியே அமாடோ கைது செய்யப்பட்டுள்ளார். நிதிச் சலவை குற்றச் செயல்களுடன் துணை ஜனாதிபதிக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என அமாடோ தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு முதல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமாடோ 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் துணை ஜனாதிபதியாக கடயைமாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love