உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகளுக்கே சந்தர்ப்பம் கிடைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது என கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதான கட்சிகள் கூட இளைஞர் யுவதிகளுக்கான சந்தர்ப்பம் வழங்குவதில் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறெனினும், புதிய தேர்தல் முறையின் ஊடாக இளைஞர் யுவதிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.