புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கு மெதடிஸ் தேவாலயம் ஆதரவினை வெளியிட்டுளது. அதன் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கெடுக்க வேண்டுமெனவும், 2015ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் மெதடிஸ் தேவாலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இலங்கையில் வாழும், சரியாக சிந்திக்கக்கூடிய அனைத்து தரப்பினரும், அரசியல் அமைப்பினை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும், புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறைமைக்கு எதிர்ப்பு வெளியிடுவதனை கைவிட்டு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், மெதடிஸ் தேவாலயம் கோரியுள்ளது.