குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தானில் போரின் போது நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்குற்றங்கள் குறித்து விசாரணை தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் பட்யூ பென்சௌடா ( Fatou Bensouda ) என்பவரேஆப்கானிஸ்தானில் போரின் போது, நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்குற்றங்கள் குறித்து விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளாா்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கலாம் என்பதை நம்புவதற்கான வலுவான நிலை உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 2003ஆம் ஆண்டு, போரின் போது, தலிபான்களின் செயல்பாடு மற்றும் ஆப்கானிஸ்தான் அரசின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க படைகளின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை இதில் விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.