165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் பெண்ணொருவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டை தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிளைவ் லூவிஸ் நிராகரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை கடுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள அவர் இவ்வாறான குற்றச்சாட்டு குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சியின் மாநாட்டில் உறுப்பினர்களை வரவேற்கும்போது அவர்களை கட்டித்தழுவுவது வழமை எனவும் ஆனால் அதனை வேண்டுமென்றே செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து தொழிற்கட்சி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Spread the love