சவூதி அரேபியாவில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் அமைச்சுக்கள் உள்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர்.
இந்தநிலையில் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றதும் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் என்ன காரணத்திற்காக கைதகியுள்ளனர் என்பது குறித்து தெளிவான் அறிவிக்கப்பவில்லை என்ற போதிலும் 2009ஆம் ஆண்டு, ஜெட்டாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் 2012 ஆம் ஆண்டில் சவூதியில் பரவிய மெர்ஸ் வைரஸ் குறித்து புதிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.