குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் வில்சன் கவுன்டி பகுதியில் ஞாயிறு ஆராதனைகளின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்திற்குள் பிரவேசித்த துப்பாக்கிதாரியொருவர் தேவாலயத்தில் குழுமியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். டெக்ஸாஸில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென மாநில ஆளுனர் ஜெர்ஜ் அப்போட் தெரிவித்துள்ளார்.
5 முதல் 72 வயது வரையிலானவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவர் 26 வயதான டேவிட் பற்றிக் கலே ( Devin Patrick Kelley ) என அடையாளம் காணப்பட்டள்ளதாகவும் குறித்த துப்பாக்கிதாரி சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.