குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய மஹாராணி உள்ளிட்ட உலகின் பலம்பொருந்தியவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகின் பலம்பொருந்திய பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்கள் பாரியளவிலான தங்களது செல்வத்தை எவ்வாறு வரி ஏய்ப்புச் செய்துள்ளார்கள் என்பது குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெரடைஸ் பேப்பர்ஸ் என்னும் ஆவணத்தின் ஊடாக இந்த விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 13.4 மில்லியன் ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் தனிப்பட்ட தோட்டங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தனிப்பட்ட நபர்கள் நிறுவனங்கள் பலவற்றினால் இவ்வாறு வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வகையில் குறித்த நபர்கள், நிறுவனங்கள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.