குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் படையினர் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை அரசாங்கப் படையினர் அங்கம் வகிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹரி ஆனந்தசங்கரி, கனடாவின் ஸ்காப்ரோவின் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கப் படையினர் தொடர்ந்தும் வடக்கு தமிழ் மக்களின் உரிமைகளை முடக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60000 ஏக்கர் பொதுமக்கள் காணிகளை படையினர் கைவசம் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட எந்தவொரு படையதிகாரிக்கோ படைச் சிப்பாய்க்கோ தண்டனை விதிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.