151
பிரான்சில் நடைபெற்ற பரிஸ் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் அமெரிக்க வீரர் ஜாக் சொக் (Jack Sock) சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜாக் சொக் 5-7, 6-4, 6-1 என்ற செற் கணக்கில் சேர்பிய வீரரான பிலிப் கரிஜினோவிக்கை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இத்தகைய போட்டியொன்றில் ஜாக் சொக் சம்பியன் பட்டம் வென்றிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள ஜாக் சொக் இந்த வெற்றியின் மூலம் 10ம் இடத்திற்குள் நுழைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love