குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக சர்வதேச சமூகத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நட்புறவான கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றி வருவதனால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஆதரவு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்வதற்கு புத்திஜீவிகள் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இலவச கல்வியை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத பணிகளை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.