குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான ராஜாங்கச் செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்கள் இன்னமும் வேகமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நல்லிணக்கம் குறித்த முயற்சிகள் பேண்தகு அடிப்படையில் அமைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு பூரண அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இணங்கிக் கொள்ளப்பட்ட அடிப்படையில் இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.