ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள தொலைக்காட்சி நிலையத்தினுள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர்; உறுதிப்படுத்தி உள்ளனர்.
காவல்துறையினர் போல் வேடம் தரித்து வந்த ஒரு தீவிரவாதி காபூலில் உள்ள தொலைக்காட்சி நிலையத்தை தாக்கியதில், இருபது பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தவறானது எனவும் ஆப்கானிஸ்தான் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிலையத்தினுள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் – 20 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சி நிலையத்தினுள் உட்புக முற்பட்ட தாக்குதலாளி கைக்குண்டினை வீசி தாக்குதலனை மேற்கொண்டு பின்னர் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாகவும் அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தொலைக்காட்சிநிலையத்திற்குள் நூற்றிற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 3 பேர் கொண்ட தற்கொலை தாக்குதல் குழு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.