187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது குறித்து இந்தக் குழுவினர் பரிந்துரை செய்வார்கள் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம மற்றும் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் இந்தக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
Spread the love