185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். கல்வியங்காடு, ஜி.பி.எஸ் வீதியை சேர்ந்த பிரபாகரன் ஜெயமலர் (வயது -43) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமானார்.
குறித்த பெண் குருதிப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டதனால் மன அழுத்தத்துக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிய வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
Spread the love