குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தடை விதிக்கப்பட்டுள்ள ரஸ்ய பனிச் சறுக்கு வீரர் தாம் குற்றமிழைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவின் முன்னணி பனிச் சறுக்கு வீரரான அலெக்சாண்டர் லெல்கோவ் ( Alexander Legkov ) வே இவ்வாறு தெரிவித்துள்ளார். 2014 சோச்சீ குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி இவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்த தடை குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததுஇ எனினும் தாம் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை எனவும் ஊக்க மருந்துகள் எதனையும் பயன்படுத்தவில்லை எனவும் அலெக்சாண்டர் லெல்கோவ் தெரிவித்துள்ளார்.
சோச்சீ குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் அலெக்சாண்டர் லெல்கோவ் 50 கிலோ மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடை விதிக்கப்பட்டுள்ள ரஸ்ய பனிச் சறுக்கு வீரர் குற்றமிழைக்கவில்லை என தெரிவிப்பு
147
Spread the love
previous post