குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நேரடி உதவி வழங்கி வருவதாக சவூதி அரேபியா குற்றம் சுமத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மான் ( Mohammed bin Salman ) இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையொன்று சவூதியில் வீழ்ந்ததாகத் தெரிவித்துள்ள முடிக்குரிய இளவசரர் இவ்வாறான நடவடிக்கையானது யுத்தத்திற்கான அழைப்பாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். எனினும், ஏமனிய ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment