217
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதையற்ற நாடு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் வழிப்புணர் ஊர்வலம் இடம்பெற்றது.
போதையற்ற நாடு” தேசிய வேலைத்திட்டம் வடமாகாணம் தழுவிய ரீதியில் இன்று இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு ஆகியன இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான போதைபொருள் எதிர்ப்புப் பேரணி கிளிநொச்சி கூட்டுறுவு சபை மண்டபம் வரை சென்று . தொடர்ந்து அங்கு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தழுவிய ரீதியில் இளைஞைர்கள் யுவுதிகள் கலந்து கொண்டனர்.
Spread the love