விடுதலைப் புலிகளுக்கு அல்லது தமிழர்களுக்கு மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துக் கொடுக்கப் போவதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அனைத்து மாகாணங்களுக்கும் சமமான வகையிலான அதிகாரங்களை வழங்குவதற்கே, தாம் யோசனைகளை முன்வைத்திருக்கிறோம் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
30 வருட கால யுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இந்த யுத்தத்தில் வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்தவர்கள் இலங்கை இளைஞர்களே.
அரசமைப்புத் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்று வருகின்றது . இது குறித்து முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் தவறான கருத்தை முன்வைத்தார்கள்.
புதிய அரசமைப்பைக் கொண்டுவந்தால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டும் என, கமல் குணரத்ன போன்றோர் தெரிவித்தார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினாhர்.