ஜம்மு காஷ்மீருக்கான இந்திய மத்திய அரசின் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா நேற்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் பிரதிநிதியாக உளவுத் துறை முன்னாள் தலைவர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 5 நாள் பயணமாக கடந்த திங்கள்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள இந்நிலையில் நேற்று ஒமர் அப்துல்லாவை சந்தித்து பேசினார்.
இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு எனவும் மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பேசியதாகவும் ஒமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளர்h. மேலும் தினேஷ்வர் மேற்கொள்ளும் பயணம் அர்த்தமுள்ளதாக இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசினோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஒமர் மத்திய அரசு தன்னிடம் ஒப்படைத்துள்ள பணியை வெற்றிகரமாக முடிப்பதற்கான தனது கருத்துகளை தினேஷ்வர் கேட்டார் எனவும் இருவரும் பேசிய தகவலை வெளியிட முடியாது. எனவும் தெரிவித்தார்.
மேலும் மாநிலத்துக்கு சுயாட்சி தர வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரம் கேட்பதற்கு ஒப்பானது என பிரதமர் மோடி கூறியிருப்பது தங்கள் எதிர்பார்ப்புகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர். தினேஷ்வர் சர்மா எங்கள் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது, சுயாட்சி அதிகாரம் பற்றியும் தங்கள் அரசியல் திட்டம் பற்றியும் பேசுவோம் எனவும் அவர் தெரிவித்தார்