குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழில். நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் சென்று தேர்தலில் போட்டியிட முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகே அவ்வாறு பதிலளித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
‘மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடியளவு ஒரு நிலையிலே நாம் இருக்காவிட்டால் இந்த நிலை ஏற்படும். நாங்கள் சொல்வதுதான் சரி என்ற எண்ணத்திலே மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கவிட்டால், அந்த மாற்றுக் கருத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பான நிலையிலேயே இருப்பார்கள். அந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது’ என முதமைச்சர் தெரிவித்தார்.