குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யா மற்றும் கட்டாரில் ஊழியர்களின் உரிமைகளை வலுப்படுத்துமாறு சர்வதேச கால்பந்தாட்டப்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்த உள்ள நிலையில் இரண்டு நாடுகளுமே உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கான ஆயத்தங்களை தீவிர முனைப்பில் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊழியர்களின் உரிமைகளை உறுதி செய்ய தவறுவதாக இரண்டு நாடுகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.உலகக் கிண்ண மைதானங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் உரிமைகளை உறுதி செய்து, அவர்கள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை 33 விடயங்களைக் கொண்ட பரிந்துரைகளை செய்துள்ளது.