குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் இதயங்களை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான உரையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இதயங்களை வென்றெடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புக்களின் ஒர் கட்டமாக அரசாங்கம் வடக்கின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சீமெந்து கல் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகள் யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கும் நலன் திட்டங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகத்தினை செயற்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.