இத்தாலியில் உள்ள வத்திகான் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பாப்பரசர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக திகழும் வத்திகான் நகரம் இது பாப்பரசரின் ஆளுமையின் கீழ் உள்ளது. அங்கு தினமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கின்ற நிலையில் இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புனித நகரமான வத்திகானில் மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சிகரெட் பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததனைக் கருத்தில் கொண்டு இத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.