180
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி அண்மையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது. இந்த வெற்றிடத்திற்கு பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தபடியாக பியசேன கமகே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். இதன் அடிப்படையில் பியசேன கமகே இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
Spread the love