ஜெர்மனியின் தலைநகர் பேர்லினில் உயிரை பறிக்கும் ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளை வழங் தாக தாதி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார் 41 வயதான நீல்ஸ் ஹோகெல் என்னும் தாதியே இவ்வாறு நோயாளிகளை கொலை செய்துள்ளார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக இவ்வாறு நோயாளிகளை கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நீல்ஸ் ஹோகெல்லுக்கு இரு நோயாளிகளை கொலை செய்த வழக்கு தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வசாரணைகளில் இருந்து அவர் பணிபுரிந்த மருத்துவமனைகளில் 106 நோயாளிகள்வரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். நீல்ஸ் 1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் இரு மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீல்ஸின் வேலை நேரங்களில்தான் பெரும்பாலான நோயாளிகள் உயிரிழந்ததனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.